டெல்லி தப்லீக் மாநாட்டில் தொடர்புடைய வெளிநாட்டினர் இந்தியா வர தடை !
டெல்லியில் மாநாடு நடத்திய அமைப்பினருடன் தொடர்புடைய வெளிநாட்டினர் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. டெல்லியில் இஸ்லாமிய சார்பில் நடைபெற்ற மாநாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது.
அதில் மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று டெல்லி காவல்துறை மற்றும் சிறப்பு பிரிவினர் சார்பில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் 541 வெளிநாட்டு நபர்களின் பின்னணியுடன் இரண்டு புதிய குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 900 வெளிநாட்டு நபர்களை கண்டறிந்து விரிவான விசாரணை நடத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய வெளிநாட்டவர் இந்தியா வருவதற்கு பத்து ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரமான பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






