ஓடுதளத்தில் இருந்த வெள்ளநீரால் வழுக்கிக் கொண்டு இறங்கிய விமானம்!
மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய சரக்கு விமானம் தண்ணீர் தேங்கி நின்றதால் வழுக்கியபடி சென்றது. மகாராஷ்டிர மாநிலத்தில் புயல் நேற்று கரையை கடந்தது. மும்பையில் கன மழை கொட்டித் தீர்த்தது. மழைக்குப் பின் அங்குள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வருகை அனுமதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான சென்ற சரக்கு விமானம் தரை இறங்கியது. மழை காரணமாக ஓடுதளத்தில் நீர் நிரம்பி இருந்ததால் நீரை விசிறி அடித்தபடி ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்த விமானம் திடீரென டயர்களில் பிடிமானம் நழுவியதால் ஓடுதளத்தில் வழுக்கிக் கொண்டு சென்றது. ஆனாலும் விமான ஓட்டுனர் அதனை மிகவும் சாமர்த்தியமாக குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தினார்.






