--- --:--:-- --

தனிமனித இடைவெளியுடன் பேருந்தில் பயணித்த குரங்கு! குரங்கு டிக்கெட் வாங்கியதா என நகைச்சுவையாக வரும் கமெண்டுகள்!

13

மேற்கு வங்கத்தில் பயணிகளுடன் குரங்கு ஒன்றும் பேருந்தில் பயணம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. கொரொனா ஊரடங்கை அடுத்து அந்த மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதற்காக தனி மனித இடைவெளியுடன் முககவசம் அணிந்த பயணிகள் மற்றும் பேருந்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

 

இந்நிலையில் தலைநகர் கொல்கத்தாவில் இக்பால்பூர் என்ற இடத்தில் அரசு பேருந்தில் பயணிகளுடன் அனுமன் மந்தி வகையை சேர்ந்த குரங்கு கொஞ்சம் அமைதியாக பயணித்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து குரங்கு பயணச்சீட்டு எடுத்ததா என்றும் முகக்கவசம் அணிய வில்லை என்று ஏராளமானோர் நகைச்சுவையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon