--- --:--:-- --

மதுபானங்களை டெலிவரி செய்ய துவக்கிய ஸ்விக்கி!

PTI31-03-2020_000245B

PTI31-03-2020_000245B

ஸ்விக்கி நிறுவனம் ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் வீடுகளுக்கு நேரடியாக மதுபானங்கள் வினியோகம் செய்யும் சேவையை விரிவுபடுத்தியுள்ளது. மாநில அரசு ஒப்புதல் பெற்ற முதற் கட்டமாக கொல்கத்தா செலூரியாவில் நேரடியாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே மதுபானங்கள் வழங்கப்படுகின்றன.

 

வாடிக்கையாளர்களின் வயதை சரிபார்ப்பதற்காக அடையாள சான்று மற்றும் செல்பி புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அனைத்து ஆர்டர்களும் செல்போன் எண்ணுக்கு வரும் ஓ‌டி‌பி முறையில் விநியோகம் செய்யப்படுகின்றன.

 

அரசு குறிப்பிட்ட அளவில் மதுபானங்கள் ஆர்டர் செய்யமுடியும். இதுதவிர மளிகை மற்றும் மீன் உள்ளிட்ட கடல் உணவு பொருட்கள் மாணவர்களுக்கான புத்தகங்கள் ஆகியவற்றை வினியோகம் செய்வது தொடர்பாகவும் மேற்குவங்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon