ஆட்டோ பைலட் மோடில் அதிவேகமாக வந்த கார் ஏற்கனவே விபத்தால் கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் மீது மோதி விபத்து!
தைவானில் ஆட்டோ பைலட் மூடில் அதிவேகமாக வந்த டெஸ்லா கார் ஏற்கனவே விபத்துக்குள்ளாகி சாலை நடுவில் கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரியில் மோதி விபத்திற்குள்ளானது. உகான் என்பவர் டெஸ்லா மாடல் 3 ரக காரில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை பார்த்ததும் ஆட்டோ பைலட் மூடில் இருந்த காரை தானே மானுயல் பிரேக்கிங் மிதித்து அதை செயல்படுத்துவதற்கு தாமதம் ஆனதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காயங்களுடன் உயிர் தப்பியவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த வீடியோ வெளியான நிலையில் விபத்துக்குள்ளானதற்கு முன்பு அதிக உராய்வு காரணமாக காரின் சக்கரங்களில் இருந்து புகைப்பட காட்சிகளும் பதிவாகியிருந்தன. மானுயல் பிரேக்கிங் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.






