--- --:--:-- --

மதுரையில் சிறுவனை தன்பாலின சேர்க்கைக்கு உட்படுத்தி தற்கொலை!

1

மதுரை மேலூர் அருகே தன்பாலின சேர்க்கைக்கு உட்படுத்தி சிறுவன் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலூரை அடுத்த ஆறுகுளம் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் நண்பர்களுடன் விளையாட சென்று வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே புதரில் சடலமாக கிடந்துள்ளார்.

 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவனின் உறவினரான கருப்பையா என்பவர் சிறுவனை தன்பாலின உறவு உட்படுத்திய போது அவன் உயிர் பிரிந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது.

 

பின்னர் இதனை மறைத்து தற்கொலை செய்து கொண்டது போல நம்ப வைப்பதற்காக சிறுவனின் மணிக்கட்டு பகுதியில் அவர்க அறுத்ததாகவும் விசாரணை நடத்திய காவலர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து கருப்பையாவை கைது செய்த காவலர்கள் அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon