--- --:--:-- --

நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை பணத்தாசையில் மார்பிங் செய்து திருமணத்தை நிறுத்திய இளைஞர்!

14

குமரியில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை விட வசதியான பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பெண் மீது அவதூறு பரப்பிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கேசவபுரம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

 

இவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். எம் எஸ் ரோடு பகுதியை சேர்ந்த எபினேசர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரதட்சணையாக பணம் மற்றும் நிலம் எபினேசர் தரப்பில் கேட்டதாகவும் அதற்கு பெண் வீட்டார் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

 

நிச்சயதார்த்தம் அன்று குறைந்த அளவில் பெண் வீட்டார் பணம் கொடுத்ததால் இவரின் பெற்றோர் இஸ்ரவேல் மற்றும் ஃப்லாரன்ஸ் அதிருப்தி அடைந்துள்ளனர். நிச்சயத்திற்கு பின்னர் எபினேசர் வெளிநாட்டிற்கு சென்று விட அந்தப் பெண்ணுடன் நடைபெற்ற நிச்சயத்தை ரத்து செய்துவிட்டு வசதிபடைத்த வேறு பெண்ணை மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

 

நிச்சயத்தை ரத்து செய்ய காரணம் எதுவும் கிடைக்காததால் ஒரு காரணத்தை உருவாக்க மகனுடன் சேர்ந்து பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணை பற்றி அவதூறாக ஒரு கடிதத்தை எழுதியும் இளம் பெண்ணின் புகைப்படத்தை வேறொரு நபருடன் இருப்பது போல் மார்பிங் செய்தும் பெண் வீட்டாருக்கு வெளிநாட்டிலிருந்து எபிணேசர் அனுப்பியுள்ளார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் எபினேசர் அவரது தந்தை இஸ்ரவேல் தாயார் ஃப்லாரன்ஸ் ஆகியோர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வேறு ஒரு ஆணுடன் இருப்பது போல் தவறாக சித்தரித்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon