--- --:--:-- --

தண்ணீர் நிறைந்த வாளியில் தலைகுப்புற கவிழ்ந்த குழந்தை! உயிரிழந்த சோகம்!

12

சென்னை கொத்தவால்சாவடி சின்னதம்பி தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதான ரிபானா பாத்திமா என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த 26ஆம் தேதி மாலை வீட்டில் குழந்தையின் தந்தை, தாத்தா உள்ளிட்ட குடும்பத்தினர் வராண்டாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க குழந்தையின் தாய் சமையலறையில் இருந்துள்ளார்.

 

படுக்கையறையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தத்தித் தத்தி நடந்து கதவு திறந்திருந்தால் குளியலறைக்குள் சென்று அதை யாரும் கவனிக்கவில்லை. குளியல் அறையில் தனது உயரம் கொண்ட தண்ணீர் வாளியில் ஏற முடியாமல் அருகில் இருந்த துணி துவைக்க பயன்படும் சிறிய இருக்கை ஒன்றின் மீது ஏறி பாதி அளவு தண்ணீர் இருந்த அறையில் எட்டிப் பார்க்கும் போது அப்படியே தலை குப்புற நீருக்குள் கவிழ்ந்து விட்டது.

 

இதற்கிடையில் குழந்தையை காணவில்லை என படுக்கையறையில் கட்டிலுக்கு கீழ் வீட்டின் அனைத்து பகுதிகளையும் தேடியவர்கள் தாமதமாகத்தான் குளியலறையை கவனித்தனர். தலை குப்புறாக கிடந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடந்த 6 நாட்களாக சிகிச்சையில் இருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொத்தவால்சாவடி போலீசார் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்போதைய நிலையில் நோய்வாய்ப்பட்டு விபத்து என எந்த காரணத்தால் உயிர் இழந்தாலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுபோல் குழந்தையின் உடலையும் பரிசோதனை செய்துள்ளனர்.

 

பெற்றோர், குடும்பத்தினர் என வீட்டில் அனைவரும் இருந்த பொழுது கவனக்குறைவால் நடந்த இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய போலீசார் குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோரின் கவனக்குறைவால் எந்தமாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்று எனக் கூறி எச்சரித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon