திட்டமிட்டபடி ரபேல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்
ஏற்கனவே திட்டமிட்டபடி ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று பிரான்ஸ் உறுதி அளித்துள்ளது. 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்தது.
முதற்கட்டமாக 18 விமானங்களை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். எஞ்சிய 18 விமானங்களை 2020 மே மாதத்திற்குள் ஒப்படைக்கவேண்டும். முதல் விமானம் கடந்த ஆண்டு பிரான்சில் வைத்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஃபிளாரன்ஸ் பார்லியிடம் தொலைபேசியில் பேசினார்.
அப்போது கொரொனா தொற்று பாதிப்பில் கடும் சவால்கள் இருந்தபோதும் திட்டமிட்டபடி விமானங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். வரும் ஜூலை இறுதியில் முதற்கட்டமாக 4 விமானங்கள் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






