--- --:--:-- --

ஆவின் பால் பணியாளர்கள் 250 பேருக்கு கொரோனா..!

8

சென்னை மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணைகளில் பணிபுரிந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவின் நிர்வாக இணை இயக்குனருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அதிகாரியின் கட்டுப்பாட்டில் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணைகள் உள்ளன.

 

இதில் சோழிங்கநல்லூரில் யாருக்கும் தொற்று கண்டறியப் படவில்லை. ஆனால் மாதவரம், அம்பத்தூரில் 750க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்த நிலையில் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தொற்று பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து மேலும் பரவும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon