--- --:--:-- --

தமிழகத்தில் முதலீடு செய்ய ஆப்பிள், சாம்ஸங், அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு!

2

தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து ஆப்பிள், சாம்ஸங், அமேசான் போன்ற 13 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரொனா வைரசால் சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவுக்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்திருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கிறது.

 

அந்த முதலீடுகளை ஏற்க அரசு சிறப்பு பணிக் குழுவை அமைத்து அண்மையில் 15 ஆயிரத்து 178 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

 

முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டிம்ரு, அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜக்டசாத், சாம்சங் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கிம் புன் உக் உள்ளிட்ட 13 மின்னணுவியல் நிறுவனங்களின் தலைவர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

 

தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற் கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சகங்களையும் புதிய முதலீடுகளுக்கு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் இந்த சலுகைகளை வழங்கும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon