--- --:--:-- --

ஜார்ஜியாவில் வானில் இருந்து பறந்து வந்து கார் கண்ணாடி மீது விழுந்த ஆமை!

10

ஜார்ஜியாவில் காற்றில் பறந்து வந்த ஆமை கார் கண்ணாடியை பதம்பார்த்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. லேக்டோனியா என்பவர் சாவன்னா என்ற இடத்தில் தனது காரை ஓட்டிச் சென்று கொண்டு இருந்தார். அப்போது வானிலிருந்து திடீரென பறந்து வந்த பொருள் ஒன்று லேக்டோணியாவின் கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதனை உற்று நோக்கியபோது பறந்து வந்து காரில் விழுந்தது ஆமை என்பது தெரியவந்தது. பின்னர் அதனை வீட்டு மருத்துவ சிகிச்சை அளித்தும் அந்த ஆமை உயிரிழந்தது. கழுகு போன்ற ஏதேனும் ஒரு பறவை ஆமையை தூக்கி செல்லும் போது தவறி விழுந்திருக்கலாம் என விசாரணை நடத்திவரும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon