பிரதமர் கரீம் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் பருப்பு, கடுகு விநியோகம்!
பிரதமரின் கரீம் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13 கோடி பேருக்கு 1.78 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு விநியோக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய உணவு கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் உட்பட 9 மாநிலங்களில் இருந்து 7.33 லட்சம் மெட்ரிக் டன் கடலை பருப்பு கொள்முதல் செய்யப் பட்டுள்ளதாகவும் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து 5 .91 லட்சம் மெட்ரிக் டன் கடுகு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தெலுங்கானா, ஒரிசா உட்பட எட்டு மாவட்டங்களில் இருந்து 2.41 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான ரஃபி பருவத்தில் இந்திய உணவு கழகம் 359. 10 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வந்து சேர்ந்ததாகவும், மார்ச் 24ஆம் தேதி என்று பொது முடக்க காலம் தொடங்கியது முதல் இன்று வரை 9.6 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளதாகவும், பயனாளிகளுக்கு 19 ஆயிரத்து 350.84 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.






