பாலியல் வழக்கில் சிக்கிய காசிக்கு ஆண்மை பரிசோதனை நடக்கப்போகிறதா?
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்தது போலவே பாலியல் மோசடி மன்னன் காசிக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர். சிபிசிஐடி போலீசார் அடுத்து செய்யப்போவது என்ன? பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நித்யானந்தாவைப் போல் பாலியல் மோசடி மன்னன் காசிக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக போலீசாரின் கஸ்டடியில் இருந்த காசி இப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார் என்கிறார்கள் தனிப்படை போலீசார். அப்படி என்னதான் நடந்தது? பாலியல் மோசடி வழக்கில் போலீசில் சிக்கிய ஜிம் டிரைனர் காசியை 6 தனிப்படை போலீசார் 6 நாட்கள் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு அறிமுகமான பெண்களை எங்கெல்லாம் அழைத்து சென்றார், அவருடைய தோழிகள் யார் என்ற பட்டியலை தெரிவித்துள்ளார்.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவியர் உட்பட பல பெண்களை சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பு கொண்டு காதலிப்பது போல் நடித்தது எப்படி என
நடித்து காட்டியுள்ளார் காசி. ரகசிய வீடியோக்களை யாருக்கெல்லாம் அனுப்பினார் என்பது தொடர்பான முழு விபரங்களையும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார் காசி.
காசியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடு திருடிய வழக்கில் சிக்கிய நபர்களை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அவர்களுக்கு போலீசார் கொடுத்த வினோத தண்டனைகளை பார்த்த காசி இனிமேல் எந்த பெண்ணையும் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டேன் என போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். 6 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காசியை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது போல் காசிக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள காசியின் கூட்டாளி கவுதம் உள்ளிட்ட முக்கிய நபர்களை இந்த வழக்கில் விசாரிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
காசி தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் அரசுக்கு பரிந்துரை செய்தார். வழக்கின் தீவிரத்தன்மை கருதியும் வெளிநாட்டுத் தொடர்புகளை கண்டறிவது ஆண்மை பரிசோதனை உள்ளிட்டவற்றையும் செய்ய வேண்டி இருப்பதால் கன்னியாகுமரி போலீசார் பதிவு செய்த 6 வழக்குகளும் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளன.






