--- --:--:-- --

சர்ச்சைக்குரிய 4 தளம் உள்ள கட்டடத்தில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி!

11

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு தளங்களைக் கொரொனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் விதிமீறி கட்டப்பட்ட நான்கு தளங்களை இடிக்கக் கடந்தாண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைக் மறுத்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தளங்களை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில் சர்ச்சைக்குரியதாக கூறப்படும் அந்த நான்கு தளங்களில் கொரொனா சிகிச்சை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. அதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் நான்கு தளங்களையும் கொரொனா சிகிச்சைக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

 

மேலும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு தேவையான தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து தமிழக அரசு செய்து தர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon