தனது தாய் இறந்ததை அறியாத குழந்தை சடலத்தை எழுப்ப முயன்ற கண்கலங்க வைக்கும் காட்சி!
பிஹாரில் தாயார் இறந்தது தெரியாமல் அவரின் சடலத்தை தொட்டில் குழந்தை ஒன்று எழுப்ப முயன்ற உருக்கமான வீடியோ வெளியாகியுள்ளது. ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப எதிர்கொண்டு வரும் இன்னல்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் வெளியாகி கண் கலங்க வைக்கின்றன.
இந்த நிலையில் குஜராத்தில் தங்கி பணியாற்றிய 23 வயது பெண் தனது இரண்டு குழந்தைகள், சகோதரி சகோதரி கணவருடன் பீகாருக்கு சிறப்பு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார். முசாபர்பூர் ரயில் நிலையம் வந்தபோது பசியாலும் தாகத்தாலும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அவரின் சடலம் துணியால் பொருத்தப்பட்டு ஓரத்தில் கிடத்தப்பட்டு இருக்க சகோதரி உள்ளிட்டோர் தூரத்தில் அழுது கொண்டிருந்தனர். தனது தாய் இறந்துவிட்டார் என்பதை அறியாத குழந்தை சடலத்தைத் தொட்டு இழுக்க முயன்றது. இந்த வீடியோ வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






