தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! வேலூரில் வீசும் அனல்காற்று!
தமிழகத்தில் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஏழு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர், பரமத்தி 106.7 டிகிரி என்ற அளவில் வெப்பம் பதிவானது.
திருச்சியில் 106.5 திருத்தணியில் நோக்கிய 106.1 மதுரை விமானநிலையத்தின் 104.7 , வேலூரில் 103.8, நாமக்கலில் 103.1, சேலத்தில் 102.1 என்ற ஃபாரன்ஹீட் அளவில் வெப்பம் பதிவானது. திருத்தணி, மதுரை விமானநிலையம், வேலூர், நாமக்கல், சேலம் ஆகிய இடங்களிலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானது.
வேலூரில் வெயில் வாட்டி வரும் நிலையில் அனல் காற்று வீசி வருவதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கோடைகாலம் துவங்கியதில் இருந்தே வேலூர் மாவட்டத்தில் வெயில் அதிக அளவில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 105 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெயில் கொளுத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்றும் அதிகப்படியாக வெயில் கொளுத்தியதால் சாலைகளில் அனல் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். வேலூரில் வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள அதிகப்படியான நீர்ச்சத்து மிகுந்த பழச்சாறுகளை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.






