மருத்துவ குழுவுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்! பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறதா?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரொனா பாதிப்பு குறித்த நிலவரங்களை கண்காணிப்பதற்காக மருத்துவ நிபுணர் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
ஒவ்வொரு முறையும் நிபுணர் குழுவினர் அளிக்கும் ஆலோசனையின்படி பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நிபுணர் குழுவினர் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.
நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள கொரொனா பொது முடக்கம் வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி அவர் ஆலோசிப்பார் என்று தெரிகிறது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக கொரொனா தொற்று நேற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் புதுமுகத்தை மேலும் நீட்டிப்பதா அல்லது தளர்வுகள் அளிப்பதா என்பது பற்றிய மருத்துவ நிபுணர்களிடம் முதலமைச்சர் கருத்து கேட்பார் என்று கூறப்படுகிறது.






