--- --:--:-- --

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்!

27

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் பகல் நேரத்திலேயே வெளியே வருவதை தவிர்க்குமாறும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது. ஆகையால் அடுத்த இரண்டு நாட்களுக்கு 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அதே நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் தென் மேற்குப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

 

இதற்கிடையே சென்னை மீனம்பாக்கம் உட்பட 9 நகரங்களில் வெயில் சதம் அடித்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon