கொரோனவால் வேலை இல்லாததால் மீன்பிடித்து தொழிலுக்கு மாறிய தொழிலாளர்கள் !
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகையாற்றில் சென்ற ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டது பின்னர் வைகை அணை அடைக்கப்பட்டதால் வைகையாற்றில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கிநின்றது அந்த பள்ளங்கில் மீன்கள் அதிகமாக இருந்தது.

தற்போது கொரோனவால் பல தொழிலாளர்கள் வேலை இல்லாததால் மாற்று தொழிலை நாடி வருகின்றனர் அதேபோல் சிவகங்கை அருகே உள்ள பையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மானாமதுரை வைகையாற்றில் மீன் பிடித்தனர் அப்போது அதிகமான மீன்கள் கிடைத்தது இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இதில் தேன் கெளுத்தி .விரால் .கெண்டை .உழுவை போன்ற மீன்கள் கிடைத்தன வைகையாற்று மீன்களுக்கு மவுசு என்பதால் அதிகமானோர் வாங்கிச்சென்றனர் இதனால் மீன்பிடித்தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.






