தண்டவாளத்தின் மீது கல்லை வைத்துவிட்டு….கல் உடையுமா? ரயில் கவிழுமா ? என இளைஞர்கள் செய்த விபரீத பந்தயம்!
ரயில்வே தண்டவாளத்தில் ஐந்தரை அடி உயரம் உள்ள கல்லை வைத்து ரயில் கவிழ்கிறதா அல்லது கல் உடைகிறதா என பந்தயம் கட்டி விளையாடிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தீவிரவாத செயல் என விசாரித்து வந்த போலீசாரின் வலையில் குடிகார இளைஞர்கள் சிக்கியது எப்படி?
எண்பதுகளில் ரயில்பாதையில் நாணயத்தை வைத்தால் ரயில் ஏறினால் அது காந்தமாக மாறிவிடும் என்று அறியாமல் சிறுவர்கள் விளையாடுகின்றனர். ஆனால் சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளை அல்ல வேண்டுமென்று ரயில்பாதையில் பொம்மை லேப்டாப் ஆகியவற்றை வைத்து வீடியோ போடுவது இந்ததருணத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
சேலத்தில் குடிபோதையில் ரயில்பாதையில் மைல் கல்லை போட்டு ரயில்கள் உடைகிறதா என பந்தயம் கட்டி இளைஞர்கள் விளையாடியுள்ளனர். இருவரும் சிக்கியது எப்படி? கடந்த திங்களன்று சேலத்திலிருந்து சாலக்குடி வரை செல்லும் சரக்கு ரயில் மாவெளிபலயம் மகுடஞ்சாவடி இடையிலான ரயில் பாதையில் பயணித்த ரயில் ஆலங்காடு புதுப்பாளையம் பகுதியில் சென்ற போது சுமார் ஐந்தரை அடி உயரம் உள்ள மைல்கல்லை மர்ம நபர்கள் ரயில்வே தண்டவாளத்தில் போட்டு இருந்ததை ஓட்டுநர் பார்த்துள்ளார்.
இருப்பு பாதையின் குறுக்கே வெள்ளையாக ஏதோ தெரிவதைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரவி பெரும் விபத்தை தவிர்க்கும் வகையில் சாமர்த்தியமாக நிலை நிறுத்தியுள்ளார். ஆனாலும் முன்பகுதி அந்த கல்லில் மோதி சுமார் 150 அடி தூரம் சென்று நின்று உள்ளது. என்ஜின் டிரைவர் ரவி அவ்வாறு நிறுத்தி இருக்காவிட்டால் ரயில் தடம்புரண்டு இருக்கும் பெரிய விபத்து நடந்திருக்கும்.
ரயில் ஓட்டுநர் ரவி கொடுத்த புகாரின் பேரில் கோவை ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் ஈரோடு ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிரவாத செயல் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வந்தது.
சம்பவத்தன்று இருப்பு பாதையில் அடையாளம் தெரியாத இருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தீவிர விசாரணையில் பூசாரி நாயக்கர் அளவில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வந்த சேலம் பாரப்பட்டி சேர்ந்த பாபு அதே பகுதியை சேர்ந்த நாகலிங்கம் ஆகியோர் இருப்பு பாதையில் அமர்ந்து மது அருந்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து பாபு, நாகலிங்கம் ஆகிய இருவரையும் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்து ரயில்வே போலீசார் விசாரித்தனர். பாபுவும், நாகலிங்கம் மயில் கல்லை தண்டவாளத்தில் வைத்தது தாங்கள் தான் என போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர். பிரச்சனையின் தீவிரம் தெரியாமல் ரயில் மோதி கல் உடைகிறதா இல்லை இருக்கிறதா எனப் பார்ப்போம் என்று ஒருவருக்கொருவர் பந்தயம் கட்டி விளையாடியுள்ளனர்.
ஐந்தரை அடி உயரம் உள்ள மயில்களை இருப்புப் பாதையில் போட்டுவிட்டு காத்து கொண்டிருந்ததாகவும் நீண்ட நேரமாக ரயில் வராததால் கல்லை திரும்ப எடுத்துப் போடாமல் அப்படியே சென்று விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். ரயிலை கவிழ்க்க வேண்டும் என்று சதி செயலில் இதை செய்யவில்லை என்பதும் இவர்கள் எந்த இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் மயில் கல்லைப்பது எப்படி தண்டவாளத்தின் மீது எப்படி தூக்கிப் போட்டார்கள் ரயில் பாதைகள் சென்ற வழி ஆகியவை குறித்து விசாரித்து வருகிறார்கள்.






