--- --:--:-- --

கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்ட 9 பேரின் சடலங்கள்..! கொலையா?

9

வடமாநில தொழிலாளர்கள் உட்பட 9 பேர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் குடும்பத்தோடு தற்கொலை என்று கருதப்பட்ட நிலையில் இப்போது கொலையாக இருக்கலாம் என்கிறார்கள் காவல்துறையினர். 9 பேருக்கு விஷம் கொடுத்து கிணற்றில் தள்ளி கொலை செய்தது யார்? 9 பேரில் 8 பேர் வடமாநில தொழிலாளர்கள் என விசாரணையில் இதுவரை தெரியவந்தது.

 

வாரங்கல் மாவட்டத்தில் குந்தா என்ற கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் பீகாரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். அவர்களில் ஒருவர்தான் மேற்கு வங்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது குடும்பத்தினரை ஐந்து பேருடன் கரிமா பார்க்கில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

 

ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டதால் வாடகை கொடுக்க வழியின்றி அதன் உரிமையாளருக்கு சொந்தமான குடோனில் குடியேறியுள்ளார். இந்த நிலையில் வசித்து வந்த மசூத் குடும்பத்துடன் காணாமல் போனதாக அதன் உரிமையாளர் சந்தோஷ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அவர்களை போலீசார் தேடியுள்ளனர்.

 

அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் சடலங்கள் மிதப்பதாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலையடுத்து போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் அங்கு முகாமிட்டனர். தண்ணீரில் மிதந்த 4 சடலங்களை கைப்பற்றினர். தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இவரது மனைவி நிஷா, மகள் மிஸ்ரா அவரது 3 வயது மகன் என்பது தெரியவந்தது .

 

ஊரடங்கு காரணமாக நெருக்கடியை தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தொடக்கத்தில் போலீசார் கருதினர். ஆனால் மேலும் 5 பேரது சடலங்கள் அதே கிணற்றிலிருந்து மீட்பு குழுவினர் மீட்டு எடுத்ததால் பரபரப்பு கூடியது. அவரின் மகன்கள் மற்றும் திரிபுரா வை சேர்ந்த ஷகீல் அகமது பீகாரை சேர்ந்த ஸ்ரீராம் ஆகியோரது உடல்கள் என்பது தெரியவந்தது.

 

இதையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை என்பது தவறான கோணம் என்று போலீசார் விசாரணையின் போக்கை மாற்றியுள்ளனர். போலீசார் அழைத்து வந்த நாய் அவர்கள் வாழ்ந்த குடியிருப்புக்கு அருகில் சென்று நின்றது. விசாரணையில் இரண்டு நாட்கள் முன்பு வரங்கள் நகரத்திற்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களைப் பெருமளவில் வாங்கி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

 

சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடிய போது இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக வேலை பார்த்த நிறுவனத்தின் உரிமையாளர் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இவர்களுடன் பணியாற்றி வந்த இரண்டு இளைஞர்களை காணவில்லை என்கிறது காவல்துறை. தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்து விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்கிறது போலீஸ்.

 

உயிரிழந்தவர்களின் மரணத்திற்கு விஷம் கலந்த உணவை உண்டது காரணமாக இருக்கலாம் என்று போலீசார், குழந்தைகள் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடந்த சண்டையால் குழு மோதல் காரணமாக யாராவது உணவில் விஷம் கலந்துள்ளனரா என்றும் விசாரணை நடந்துள்ளது. பாழடைந்த கிணற்றில் 9 பேர் விழுந்த பலியாவது நடைமுறையில் சாத்தியமில்லை.

 

எனவே இவர்களை கொலை செய்து யாராவது கிணற்றில் வீசி இருக்கலாம் என்கிறது காவல்துறை. அதே போன்று ஒருவர் இதனை செய்திருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் இருவர் இந்த காரியத்தை செய்திருக்க வேண்டும் என்றும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon