--- --:--:-- --

முன்னாள் முதல்வர் ஜெ.வின் இல்லத்தை நினைவு இல்லமாக்க அவசரச் சட்டம்..!

13

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்க தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

 

இதையடுத்து போயஸ் கார்டனில் அவர் வசித்த வேதா இல்லம் நினைவு இல்லமாக அமைக்கப்படும் என 2017 ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. வேதா நிலையத்தில் உள்ள பொருட்களை அர சுடைமையாக்க வழிவகை செய்ய சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

 

இதன் மூலம் வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடைமை ஆகின்றனர். ஜெயலலிதா நினைவில் அமைப்பிற்கான தலைவராக முதலமைச்சரும் உறுப்பினர்களாக துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேதா நிலையத்தையும் அதிலுள்ள பொருட்களையும் பராமரிக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்க உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon