வாடகைக்காக இளம்பெண்களை விடுதியில் வைத்து பூட்டிய உரிமையாளர்!
ஊரடங்கு காலத்திற்கான வாடகை கேட்டு தங்கும் விடுதி உரிமையாளர் ஒருவர் கல்லூரி மாணவிகளை சிறை பிடித்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைசூரை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தனியார் பிஜி ஹாஸ்டலில் தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி கன்னட புத்தாண்டை முன்னிட்டு ஹாஸ்டலில் இருந்து தங்களது சொந்த ஊரான மைசூருக்கு திரும்பியிருந்தனர்.
ஊரடங்கு காரணமாக அவர்களால் மீண்டும் ஹாஸ்டலுக்கு வர இயலவில்லை. கர்நாடகாவில் ஊரடங்கு தளர்த்தப் பட்டதைத் தொடர்ந்து ஹாஸ்டலில் உள்ள தங்களின் பாட புத்தகங் களை எடுப்பதற்காக வந்த மாணவிகளிடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு வாடகையை கொடுக்கும்படி ஹாஸ்டல் உரிமையாளர் கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் மறுக்கவே ஆத்திரமடைந்த தங்கும் விடுதி உரிமையாளர் 2 இளம்பெண்களையும் விடுதியின் உள்ளே வைத்து கதவை பூட்டி சென்றுள்ளார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இளம்பெண்கள் தவித்த நிலையில் அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த விடுதிக்கு விரைந்து வந்த போலீசார் இளம் பெண்களை விடுவித்த தங்கும் விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






