--- --:--:-- --

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கோவில் அர்ச்சகர்!

7

சென்னை மடிப்பாக்கம் அருகே 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட கோவில் அர்ச்சகர் ஒருவரை சிறுமியின் பெற்றோரே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நகர மண்டபம் இணைப்பு சாலையில் தனியார் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 59 வயதான சிவகுமார் என்ற அந்த நபர் கடந்த புதன்கிழமை அதே குடியிருப்பில் உள்ள 10 வயது சிறுமியிடம் அர்ச்சகர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் பயந்துபோன சிவக்குமார் தலைமறைவானார். அதிகாலை 5 மணியளவில் யாருக்கும் தெரியாமல் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து செல்லலாம் என வீட்டுக்கு வந்த அவரை உள்ளேயே வைத்துப் பூட்டிய சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிவகுமாரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon