காவிரி டெல்டா மாவட்டங்களில் குடி மராமத்து பணிகளை கண்காணிக்கவும், தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவும் சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களின் வேளாண் பணிகளை தொடங்க வசதியாக வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது.
வரத்துக் கால்வாய் மற்றும் நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் குடிமராமத்து பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு குடி மராமத்து பணிகளை கண்காணிக்கவும் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவும் சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
அதன்படி தஞ்சை மாவட்டத்து ககன்தீப் சிங் பேடி, திருவாரூர் மாவட்டத்திற்கு ராஜேஷ் லக்கானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்திற்கு சந்திரமோகன், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அபூர்வா, கரூர் மாவட்டத்திற்கு கோபால் ஆகியோரும் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்திற்கு கார்த்திக், அரியலூர் மாவட்டத்திற்கு விஜயராஜ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.