மேற்கு வங்கத்தில் அம்பன் புயல் பாதித்த பகுதிகளை அந்நாட்டு முதலமைச்சருடன் பார்வையிட்டார் பிரதமர் மோடி!
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தின் சீரமைப்பு பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அம்பன் புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் உருக்குலைந்து காணப்படுகின்றன. புயலில் சிக்கி 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று கொல்கத்தா சென்று அடைந்தார். எண்பத்து மூன்று நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக டெல்லியை விட்டு வெளி மாநிலத்திற்கு சென்று பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆளுநர் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். அப்போது மூவரும் கொரொனா பரவலை தடுக்கும் வகையில் முக கவசங்களை அணிந்து இருந்தனர். புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் மோடி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மேற்கு வங்க மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் துணை நிற்பதாக தெரிவித்தார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்த பிரதமர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று பிரதமர் கூறினார். மறுகட்டமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் கொரொனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.






