--- --:--:-- --

பெண்களை ஏமாற்றிய காசி மீண்டும் 6 நாள் காவலில் விசாரணை!

2

சமூக வலைதளங்கள் மூலம் பழகி பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் கைதாகியுள்ள காசியை இரண்டாவது முறையாக ஆறு நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

தமிழகம் முழுவதும் பல பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி அவர்களது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பண மோசடியில் ஈடுபட்ட காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். காசியை ஏற்கனவே மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரது நண்பர் டேசன் ஜீனோ கைது செய்யப்பட்டார்.

 

மேலும், காசி தொடர்பாக பல்வேறு தகவல்கள் கசிந்து கொண்டே இருந்த நிலையில் அவருக்கு வேறு யாரெல்லாம் உதவி செய்துள்ளனர் என்பதை கண்டறியவும் காசியை இரண்டாவது முறையாக ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

 

போக்சோ வழக்கினை அடிப்படையாகக் கொண்டு தற்போது கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி விசாரணையை மேற்கொள்ள உள்ளார். காசி மீண்டும் விசாரணை வளையத்திற்குள் வருவதால் மேலும் பல உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon