--- --:--:-- --

கொரொனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை!

12

சென்னையில் கொரொனா பரவலை கட்டுப் படுத்தும் விதத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு ஒரு வாரம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலமும் வீட்டில்தான் இருக்க வேண்டும் எனவும் வெளியில் வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

உத்தரவை மீறி காவலர்கள் யாரேனும் வெளியே நடமாடினால் உடனடியாக சென்னை மாவட்ட காவல் துறையிலிருந்து மாவட்ட காவல் துறைக்கு மாற்றப்படுவார் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வடபழனி காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர்கள் உட்பட சுமார் ஏழு காவலர்களுக்கு ஒருவார கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோன்று மற்ற காவல் நிலையங்களில் தொடர் கொரொனா பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon