--- --:--:-- --

இரட்டை சகோதரிகள் தற்கொலை! காரணம் என்ன?

11

பெற்றோர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதால் மனமுடைந்த இரட்டை மகள்கள் திடீரென தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நடந்துள்ளது. இந்த இரண்டு மாணவிகளும் வகுப்பில் படுசுட்டி ஆர்வமாகப் படித்து வந்த இந்த இரட்டையர்கள் திடீரென தற்கொலை செய்து கொண்டனர் என்றால் நம்ப முடியவில்லை.

 

மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டதால் தாய் , தந்தைக்கு இடையே நடந்த சூடான வாக்குவாதம் மகள்களின் உயிருக்கே உலை வைத்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மாருதி நகர் பகுதியை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் பாலசுப்ரமணியம் இவருக்கு ஒரு மகன் மற்றும் இரட்டை மகள்கள் உள்ளனர்.

 

செவ்வாய்க்கிழமை காலை ஆன்லைன் வகுப்பிற்காக பத்மப்ரியா ஹரிப்ரியா என்ற 2 மகள்களும் மாடியில் உள்ள அறைக்கு சென்று உள்ளனர். வெளியே சென்று திரும்பிய தந்தை பாலசுப்பிரமணியம் அவர்கள் எங்கே என மதியம் ஒரு மணிக்கு மனைவியிடம் கேட்டுள்ளார். ஆன்லைன் வகுப்பில் இருப்பதாக கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் மாலை 4 மணி வாக்கில் மாடிக்கு போய் பார்த்துள்ளனர்.

 

அப்போது ஒருவர் மின்விசிறியிலும் மற்றொருவர் இரும்புக் கம்பியும் புடவையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் தாய், தந்தை இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

 

அதுவே இரட்டை சகோதரிகளின் இந்த சோக முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. தங்களின் பிரச்சனைகளை தனியாக விவாதித்துக் கொள்ள வேண்டுமே தவிர குழந்தைகளின் முன்பு சண்டை விடுவது தவறு.

 

இந்தப் ஊரடங்கு காலத்தில் பெற்றோர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருக்குமோ அதுபோல குழந்தைகளுக்கும் மன அழுத்தம் இருக்கும் என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் மனநல மருத்துவர். பதினோராம் வகுப்பு படித்து வந்த இரட்டையர்கள் திடீரென தற்கொலை செய்துகொண்ட விவகாரம் காட்பாடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon