--- --:--:-- --

சென்னையில் அதிகரித்து வரும் கொரொனா பரவல்!

5

சென்னையில் கொரொனா வைரஸ் பரவல் அதிகம் இருக்கும் மண்டலங்களாக ராயபுரம், கோடம்பாக்கமும் நீடிக்கின்றன. என்ன நடக்கிறது கோடம்பாக்கத்தில்? 22.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கோடம்பாக்கம் மண்டலத்தில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள்.

 

16 வார்டுகளை கொண்ட கோடம்பாக்கம் மண்டலம், கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, கேகே நகர், அசோக் நகர், ஆர் ஆர் காலனி, கோடம்பாக்கம், தம்பையா ரோடு, டி நகர், ஜாஃபர்கான் பேட்டை, சைதாப்பேட்டை, வ உ சி நகரை உள்ளடக்கியது. கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி கோடம்பாக்கம் மண்டலத்தில் மொத்தமே 60 தொற்றுகள் தான் உறுதி செய்யப்பட்டிருந்தன.

 

இந்த மண்டலத்திற்கு உட்பட்ட கோயம்பேட்டில் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் கொரொனா பரவ தொடங்கியது. இந்த எண்ணிக்கை மே 19ஆம் தேதி 1,077 அதிகரித்துள்ளது. இங்கு மே ஒன்றாம் தேதி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக 13 பகுதிகள் இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

 

குறிப்பாக 127 வது வார்டில் மட்டும் 19 தெருக்களில் கொரொனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. பரவல் அதிகரித்துக் கொண்டே போனாலும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே இருப்பது ஒன்றே ஆறுதலான விஷயமாக உள்ளது. ஆயினும் கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால் பல கேள்விகள் எழுகின்றன.

 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தொற்று பரவுகிறதா? கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன? கண்டைன்மெண்ட் முறைகளில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா?போன்ற கேள்விகள் நீளுவது போல பாதிப்பு எண்ணிக்கையும் நீள்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon