--- --:--:-- --

கோவையின் வெவ்வேறு காவல் நிலையங்களில் திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி,தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு !!!

1

கோவை பேரூர் காவல் நிலையத்தில் திமுக மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம். பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்ட சமூகத்தை தகாத வார்த்தைகளால் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி எம். பி. மீது குற்றச்சாட்டு எழுந்தது.

 

இந்த நிலையில் கோவை பேரூர் அருகே உள்ள சுண்டக்காமுத்தூரை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் பேரூர் காவல் நிலையத்தில் குறிப்பிட்ட சமூகத்தை தரக்குறைவாக பேசியதாக திமுக எம். பி ஆர்.எஸ். பாரதி மீது புகார் மனு அளித்தார். இதையடுத்து பேரூர் காவல் நிலையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் பட்டியல் இன மக்களை அவமானப்படுத்தும் வகையில் இழிவாக பேசியதாக பா.ஜ.க – வைச்சேர்ந்த ஜெகன்நாதன் என்பவர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும்,மேட்டுப்பாளையம்,சிறுமுகை உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் திமுக எம்.பி தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையின் வெவ்வேறு காவல் நிலையங்களில் திமுக எம்.பி – க்கள் ஆர்.எஸ்.பாரதி,தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon