--- --:--:-- --

அறிவுப்பசியை மட்டுமல்ல,வயிற்றுப்பசியையும் போக்க தயார் – — சபாஷ் ஆசிரியர்கள் !!!

4

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இதனால் கூலி வேலைக்கு செல்வோர்,ஆதரவற்றோர் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.இவர்களுக்கு உதவும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தன்னார்வலர்களும் தாமாக முன்வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

 

இந்த நிலையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்களது பள்ளியில் பயிலும் தாய்,தந்தையரை இழந து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

 

ஆம்.காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தாய்,தந்தையரை இழந்த அல்லது இருவரையும் இழந்து பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் அரிசி,மளிகை,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி அசத்தியுள்ளனர்.அதனை பெற்று கொண்ட மாணவர்கள் கண்ணீர் மல்க தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி கூறுகையில் ” தங்களது பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் ஏழ்மை நிலையில் இருந்து வருகின்றனர்.தாய்,தந்தையரை இழந்த அல்லது இருவரையும் இழந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர்.கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இம்மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களில் 40 பேரை தேர்ந்தெடுத்து அரிசி,மளிகை,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரூ.30 ஆயிரம் மதிப்பில் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும்,தங்களிடம் பயிலும் மாணவர்கள் எவ்விதத்திலும் கஷ்டப்பட கூடாது.அதனால் தான் தங்களால் முயன்ற அளவில் மாணவர்களுக்கு அத்தியாவசியப்பொருட்களை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.தங்களிடம் பயிலும் மாணவர்களின் அறிவுப்பசியை மட்டுமல்ல வயிற்றுப்பசியையும் போக்க தாங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் முயற்சிக்கு நாமும் பாராட்டுக்களை தெரிவிப்போம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon