ஊரடங்கின் போது இராமநாதபுரத்தில் அரங்கேறிய பாலியல் தொல்லை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள்!
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத்தொடங்கியதின் விளைவாக கடந்த மார்ச் மாதத்தில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இன்று வரையிலும் ஊரடங்கு உத்தரவு தொடருமா இல்லை தளர்த்தப் படுமா என்று எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு கொலை கொல்லை சிறுமி பாலியல் பலாத்காரம் வழிப்பறி என அரங்கேற தொடங்கியது.

இந்த ஊரடங்கு நேரத்தில் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் , மற்றும் கமுதி பெருநாழி அருகேயுள்ள உச்சிநத்தம் பகுதி, மண்டலமாணிக்கம் பகுதி வீரசோழன்பிரிவு சோதனை சாவடி வாகன தனிக்கையின் போது, மேலும் முதுகுளத்தூர் அருகே உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தின் அருகே வாகனத்தில் கடத்த முயன்ற போது, போலீசாரிடம் சிக்கியது, மண்டபம் அருகே உள்ள வலையர்வாடி பேருந்து நிலையத்தில், ஏர்வாடி காட்டுப்பள்ளி சுடுகாடு பகுதியில், மண்டபம் அகதிகள் முகாம் அருகே காரில் கடத்தல் என்று கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வேலைகள் அரங்கேறியுள்ளது.
இதேபோல் கேணிக்கரை அருகிலுள்ள ஏந்தல் பகுதியிலும் இராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகிலும் சட்ட விரோதமாக கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததை காவல்துறை கைப்பற்றியது.மேலும் உச்சிப்புளி அருகே சேது நகர் பகுதி, திருவாடானை மங்களக்குடியில் உள்ள சுடுகாட்டு பகுதி,மண்டலமாணிக்கம் அருகேயுள்ள சின்ன உடப்பங்குளம் பகுதி, மற்றும் கேணிக்கரை அருகிலுள்ள பயணியர் விடுதி ஒன்றில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.

இதனை போன்று மண்டபம் பகுதி,அபிராமம்,திருப்பாலைக்குடி,சத்திரக்குடி, பரமக்குடி தாலுகாவில் உள்ள மஞ்சக்கொள்ளை வைகை ஆற்றில், எஸ் பி பட்டிணம், பேரையூர் அருகே உள்ள மேலக்கன்னிசேரி, சாயல்குடி, கமுதி, தொண்டி, திருப்புல்லாணி, நயினார் கோவில், இராமநாதபுரம் காவனூர் போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் வாகனங்கள் பறிமுதல் செய்தும் உள்ளனர் காவல்துறை.

மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த 1000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்தும் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.ஊரடங்கு உத்தரவு நேரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் 4000 க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளது மாவட்ட காவல்துறை.






