டாஸ்மாக் பெயரில் ஆன்லைனில் பணம் பறித்த மோசடிக் கும்பல்!
டாஸ்மாக் பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கி மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். டாஸ்மாக் தொடர்பான வழக்கில் கூட்டத்தைத் தவிர்க்க மதுபானங்கள் விற்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதனை பயன்படுத்தி dasmac.web. app என்ற போலி இணையதளத்தைத் தொடங்கி மோசடி கும்பல் ஒன்று மதுபானம் ஆன்லைனில் கிடைக்கும் என விளம்பரம் செய்தது. இதனை அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளம் என நம்பி பணம் செலுத்தி ஏமாந்த குடிமகன்கள் பலர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அந்த இணையதளத்தை முடக்கிய சைபர் கிரைம் போலீசார் மோசடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.






