விசாகப்பட்டினத்தில் 12 பேரை பலிவாங்கிய எல்ஜி பாலிமஸ் ஆலையில் இருந்து ஸ்டைரின் நீக்கம்!
விசாகப்பட்டினத்தில் 12 பேரை பலிவாங்கிய எல்ஜி பாலிமஸ் ரசாயன ஆலையில் இருந்து விஷதன்மை வாய்ந்த ஸ்டாரின் மூலப்பொருள் தென் கொரியாவிற்கு திரும்ப கொண்டு செல்லப்படுகிறது .கடந்த 7ஆம் தேதி காலை ஏற்பட்ட கசிவினால் வெளியான விஷக் காற்றை சுவாசித்த அவர்களில் 12 பேர் பலியானதுடன் 800 க்கும் மேற்பட்டவர்கள் மயக்க நிலையை அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
தென் கொரியாவில் இருந்து வந்த நிபுணர் குழு நடத்திய ஆய்வுக்கு பிறகு சுமார் 8,000 டன் ஸ்டைரின் மூலப்பொருள் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சியோலுக்கு அனுப்பப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை எஞ்சியுள்ள 5 ஆயிரம் டன் மூலப்பொருளும் சியோலுக்கு அனுப்பப்பட உள்ளது.






