--- --:--:-- --

மதுக்கடைகளை திறக்க தடை கோரிய வழக்கு விசாரணை!

12

டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளில் அரசு தரப்பின் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை நடத்துகிறது. மதுக் கடைகளை திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி ஏ‌பி சாகி, தலைமை நீதிபதி வினித் கோத்தாரி மற்றும் பிரகாஷ் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தன.

 

வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இந்த விசாரணையில் டிஜிட்டல் முறையை பின்பற்றுவதற்கான நடை முறைகளை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அப்போது தலைமை நீதிபதி டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

 

விசாரணையின் போது தமிழகத்தில் சுதந்திரத்துக்கு முன்னும், பின்னுமாக 50 ஆண்டுகள் மதுவிலக்கு அமலில் இருந்துள்ள நிலையில் தற்போது ஏன் அமல்படுத்த முடியவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக இருக்கும் நீதிமன்றம் பொது அமைதியும், சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்தால் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். முழுமையான மதுவிலக்கை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள் மக்கள் உயிர் தான் முக்கியமே தவிர வருமானம் அல்ல என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon