எடப்பாடியில் 90,000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி!
சேலம் மாவட்டம் எடப்பாடியில் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு எடப்பாடி பழனிசாமி சார்பில் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் சொந்த தொகுதியான எடப்பாடியில் 90 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி அளிக்குமாறு அறிவுறுத்தியதை அடுத்து நாள்தோறும் ஏழை எளியோருக்கு 5 கிலோ அரிசி வழங்கும் வகையில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 17 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி அதிமுக நிர்வாகிகள் வழங்கப்பட்டது.






