--- --:--:-- --

20 லட்சம் கோடிக்கான திட்டம்! 2ம் கட்ட அறிவிப்பு வெளிவரும்!

4

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி நலத்திட்டங்களில் இரண்டாம் அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவிக்க உள்ளார். கொரொனா பரவல் காரணமாக இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

 

இந்த திட்டத்திற்கான முதல்கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். அப்போது தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் வெளியிடப்பட்டது. மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு நிறுவனங்களின் நலனுக்காக கடனுதவிகள் அறிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து இன்று 20 லட்சம் கோடி கடன் திட்டங்களில் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதில் ஏழை எளிய மக்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon