காசுக்காக மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருக்கிறது அரசு.தாங்குமா தமிழகம் ? – நடிகர் கமல் ட்வீட் !!!
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் அமலில் உள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.இதில் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி கடைகள் திறக்கப்பட்டன.தொடர்ந்து மே 7 ,8 ஆகிய இரு நாட்கள் திறக்கப்பட்ட நிலையில் நடிகர் கமலின் மக்கள் நீதி மைய்யத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி டாஸ்மாக் கடைகள் செயல்பட தடை விதித்தது.பின்னர்,கடைகள் மூடப்பட்டன.
இத்தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.தமிழக அரசின் மனுவில் பிழை இருப்பதால் அதனை உடனடி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.பிழை திருத்தத்திற்கு பின்னர் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டின் மனு விசாரணைக்காக இன்று வர உள்ளது.

இந்த நிலையில் நடிகரும்,மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் வெளியிட்டுள்ள ட்வீட்டில் முன்னேற்றத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது.கொரோனா பாதிப்பில. 8 ஆம் இடத்தில் இருந்து 2 ஆம் இடத்தை எட்டிப்பிடித்து விட்டது.காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருக்கிறது அரசு.#தாங்குமா தமிழகம் என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு காசுக்காக மட்டுமே மதுக்கடைகளை திறக்கப்பார்ப்பதாக நேரடியாகவே சாடியுள்ளார் நடிகர் கமல்.இது அரசியல் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






