கருணை உள்ளம் கொண்ட கருங்குடி ஊராட்சி மன்ற தலைவர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்
இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்குடி ஊராட்சியில் பனிபுரியும் தூய்மை பணியாளர்களின் நலன் கருதியும் மேலும் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊராட்சி நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்து வருவதனையடுத்து இன்று கருங்குடி ஊ.ம.தலைவரும்,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான மாரியப்பன் நிவாரணப்பொருட்களை வழங்கினார்.
மேலும் கருங்குடி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும்,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான மு.துரை ராஜ், ஊ.ம.துனைத்தலைர் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர்,கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.






