சோதனை அடிப்படையில் பேருந்துகளை இயக்க முடிவு!
Passengers during Haryana Roadways Strike at ISBT in Sector 17 of Chandigarh on Tuesday, June 13 2017. Express Photo by Sahil Walia *** Local Caption *** Passengers during Haryana Roadways Strike at ISBT in Sector 17 of Chandigarh on Tuesday, June 13 2017. Express Photo by Sahil Walia
சோதனையின் அடிப்படையில் நாளை முதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் சோதனை அடிப்படையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் குறிப்பிட்டார்.
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் குறித்து மத்திய அரசு தெரிவித்த வழிகாட்டுதலின்படி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பஞ்ச்குளா, அம்பாலா, சிர்சா ஆகிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் ஆனால் நோய் தொற்று தொடர்பாக பாதுகாப்பு அம்சங்களை குறைக்காமல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.






