--- --:--:-- --

ஆன்லைனில் மதுவை விற்க உத்தரவிடக்கோரிய வழக்கில் மனுதாரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்!

5.1

டாஸ்மாக் மதுபானங்களை விற்க மொபைல் ஆப் அல்லது வெப்சைட் உருவாக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

 

வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த மனுவில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் வாங்குவதற்கு உரிய ரசீது அளிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

 

மது விற்பனை செய்ய ஒரு மொபைல் ஆப் மற்றும் இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் மதுபான கடைகளில் ரொக்க விற்பனையை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் கேட்டுக்கொண்டிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இந்த அபராதத்தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon