மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை!
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் உலக சுகாதார அமைப்பு மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மருத்துவ குழு ஆலோசனை படி தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதாகவும் பொதுமக்களுக்கு அனைத்து வகையிலும் அரசு உதவி செய்கிறது எனவும் தெரிவித்த முதலமைச்சர், ஏப்ரல், மே, மாதத்திற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள ரேஷன் பொருட்கள் ஜூன் மாதம் வழங்கப்படும் என்றும் தமிழகத்தில் உணவு பஞ்சம் என்ற பிரச்சனையே எழவில்லை என்றும் கூறினார்.
இந்த ஆண்டும் குடிமராமத்து திட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் நீர் சேமிக்கப்பட்டு கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் உள்ளோம் என்றும் டெல்டா பகுதியில் விரைவாக கால்வாய் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.






