தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போற்றி தலை வாழை இலையுடன் விருந்தளித்த ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்
சிவகங்கை மாவட்டம் மாம்பட்டி ஊராட்சியில் சுற்றியுள்ள பத்து ஊராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போற்றி விருந்தளிக்கும் நிகழ்ச்சி சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திவ்ய பிரபு ஏற்பாட்டில் மாம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அரளிக்கோட்டை ஏரியூர் மாம்பட்டி மல்லாக்கோட்டை ஜெயங்கொண்ட நிலை உள்ளிட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சிக் கழகச் செயலாளர் அவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திவ்ய பிரபு பொன்னடி போற்றி தலைவாழை இலை போட்டு விருந்தளித்தார். உடன் அதிமுக மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் பிரபு மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






