--- --:--:-- --

ஏர் இந்தியா நிறுவனத்தின் 5 விமானிகளுக்கு கொரோனா?

5.1

கொரொனா தொற்று இருப்பதாக கூறப்பட்ட ஏர் இந்தியா விமானிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு கொரொனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது . பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக இந்தியா வந்தே பாரத்மிஷன் ஆபரேஷனை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

 

இதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள பயணிகளை அழைத்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த 77 விமானிகளுக்கு சோதனை செய்யப்பட்டது. இதில் சீனாவுக்கு சென்று திரும்பிய 5 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால் இவர்கள் யாருக்கும் அறிகுறியே இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட ஐந்து விமானிகளுக்கு இரண்டாவது முறையாக சோதனை செய்யப்பட்டதில் தோற்று இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon