ஏடிஎம் இயந்திரத்திற்குள் புகுந்த விஷப்பாம்பு!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் ஏடிஎம் மையத்துக்குள் விஷ பாம்பு புகுந்த வீடியோ வெளியாகியுள்ளது. காசியாபாத் மாவட்டம் கோவிந்தபுரம் பகுதியில் இயங்கிவரும் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் பெரிய பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பாம்பு வெளியேறாத வகையில் வெளிப்புறமாக கதவை மூடிய காவலாளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சரியான நேரத்தில் வாடிக்கையாளர் பாம்பு இருந்ததை கவனித்ததால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுப்பது தடுக்கப்பட்டது.







