மதுக்கடைகளை திறக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு ! 10 மணிக்கு நடக்க போவது என்ன?
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து மக்கள் அனைவரும் கருப்பு சின்னம் அணியுமாறு திமுக தலைமையிலான கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து மு க ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் தமிழக அரசு கொரொனா பரவலை தடுக்கும் ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளித்தாலும் அக்கறையின்றி செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் அரசை கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது கடைகள் திறக்கப்படும் வரை கண்டிக்கும் வகையிலும் மாநில அரசுக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும் மக்கள் அனைவரும் இன்று கருப்பு சின்னம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன்பு 5 பேருக்கு அதிகமாகாமல் நின்று அதிமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்புமாறு திமுக கூட்டணி சார்பில் கூறப்பட்டுள்ளது.






