--- --:--:-- --

பொதுமுடக்கத்தின் போது மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் செய்தது என்ன?

1

பொது முடக்கத்தால் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் செய்தது என்னென்ன? ஏழை மக்களுக்கு உதவ ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை முன்பே ஒதுங்கி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

 

பிரதான் மந்திரி கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு உதவி தொகை மற்றும் உணவுபொருட்கள் வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதற்காக இதுவரை 28 ஆயிரத்து 256 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

அதில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை மட்டும் 13 ஆயிரத்து 855 கோடி ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. ஏழைப்பெண்களின் ஜந்தன் கணக்கில் 9 ஆயிரத்து 930 கோடி ரூபாயும் கணவரை இழந்த பெண்கள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் உதவித் தொகைக்காக 1,405 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க 3,066 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசைப் பொருத்தவரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கியது.

 

அதேபோல் அமைப்புசாரா தொழிலாளர் களுக்கும் உதவி தொகை வழங்கப்பட்டது. ஏப்ரல், மே மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon