மது யாருடைய அத்தியாவசிய தேவை? அரசுக்கா? மக்களுக்கா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் எதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்கிறது? மது யாருடைய அத்தியாவசிய தேவை என்று மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு என்று சத்தியம் செய்து ஆட்சிக் கட்டிலில் ஏறிய அரசு இது என்று குறிப்பிட்டுள்ள கமலஹாசன் எவரின் வழிகாட்டுதலின்படி ஆட்சி நடக்கிறது என்று சொல்லப்படுகிறதோ அவர் 500 மதுக்கடைகளை மூடி மூன்றாவது பதவிக்காலத்தை தொடங்கினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

மது யாருடைய அத்தியாவசிய தேவை அந்த வருமானத்தை நம்பி இருக்கும் அரசுக்கா சாராய ஆலைகளில் விற்பனை குறைந்ததை நினைத்து கவலையில் உள்ள ஆண்ட, ஆளும் கட்சியினருக்கா என்று கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Leave a Reply